பாஜகவால் 25 ஆண்டுகள் வீணாகிவிட்டன – உத்தவ் தாக்கரே!

Share this News:

மும்பை (24 ஜன 2022): பாஜகவுடனான கடந்த 25 ஆண்டுகால கூட்டணி வீணாகிவிட்டதாக சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவசேனா முக்கிய பிரமுகர்களுடனான ஆன்லைன் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, பாஜக நமது வீட்டிற்குள் நுழைந்து நம்மையே அழிக்க முற்பட்டு விட்டது. அதனாலேயே அக்கட்சியை விட்டு விலகினோம் என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்துத்துவா வலிமைக்காக பாஜகவுடன் சிவசேனா இணைந்தது. சிவசேனா ஒருபோதும் இந்துத்துவாவை அதிகாரத்திற்காக பயன்படுத்தியதில்லை. பாஜகவின் சந்தர்ப்பவாதம் இந்துத்துவாவை வளர்ப்பதற்காக மட்டுமே என்று தான் நம்புவதாக உத்தவ் கூறினார்.

பாஜகவின் தேசியக் கனவுகளை நனவாக்க முழு ஆதரவு அளித்தோம். தேசிய அளவில் பாஜக முன்னிலை வகிக்க வேண்டும் என்றும், மகாராஷ்டிரா சிவசேனா கையில் இருக்க வேண்டும் என்றும் இரு கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து இருந்தது. ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றி நம் சொந்த வீட்டினுள் நுழைய முயன்றனர். எனவே நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது, ”என்று உத்தவ் கூறினார்.

2019 இல் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *