பாஜகவால் 25 ஆண்டுகள் வீணாகிவிட்டன – உத்தவ் தாக்கரே!
மும்பை (24 ஜன 2022): பாஜகவுடனான கடந்த 25 ஆண்டுகால கூட்டணி வீணாகிவிட்டதாக சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா முக்கிய பிரமுகர்களுடனான ஆன்லைன் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, பாஜக நமது வீட்டிற்குள் நுழைந்து நம்மையே அழிக்க முற்பட்டு விட்டது. அதனாலேயே அக்கட்சியை விட்டு விலகினோம் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்துத்துவா வலிமைக்காக பாஜகவுடன் சிவசேனா இணைந்தது. சிவசேனா ஒருபோதும் இந்துத்துவாவை அதிகாரத்திற்காக பயன்படுத்தியதில்லை. பாஜகவின் சந்தர்ப்பவாதம் இந்துத்துவாவை…