மத்திய பாஜக அரசுக்கு மற்றும் ஒரு நெருக்கடி- ஐநா மனித உரிமைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு!

Share this News:

புதுடெல்லி (03 மார்ச் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் மனு அளித்துள்ளார்.

மேலும் இந்தியா தொடர்பான வழக்கில் வெளிநாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என்று மத்திய வெளியுறவு விவகாரத்துறை தெரிவித்திருக்கும் நிலையில், சிஏஏ விவகாரம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மனித உரிமை சார்ந்து உலக நாடுகளின் அரசுகள் கொண்டுவரும் கொள்கை முடிவுகளில் ஐ.நா. மனித உரிமை சார்பில் கருத்துகளை முன்வைக்க வழிவகை செய்து வருகிறோம். அதன் அடிப்படையிலயே இந்த மனுவும் தாக்கல் செய்யப்படுகிறது.

மேலும் உள்நாட்டு விஷயத்தில் தலையிடப் போவதில்லை என்று கூறியுள்ள மனித உரிமைகள் ஆணையம், புதிய கொள்கை மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்வதில் மட்டுமே எங்களது கவனம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply