தூக்குத் தண்டனை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு மனு!

Share this News:

புதுடெல்லி (22 ஜன 2020): தூக்குத் தண்டனைகளின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது.

நிர்பயா வன்புணர்வு கொலை குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டும் குறிப்பிட்ட நாளில் தண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிப் போகிறது. இதனால் நாட்டில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையிலும், தூக்குத் தண்டனை விவகாரத்தில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

முக்கிய வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு உள்ள உரிமை தொடர்பாக, உச்சநீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவுகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடி தண்டனையை தாமதப்படுத்துகின்றனர். இது குற்றவாளிகளுக்கு சாதகமாகிறது.

இதனையடுத்து, தனது முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். தூக்கு தண்டனைக்கு எதிரான மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், அதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு விதிக்க வேண்டும். குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply