புதுடெல்லி (29 ஜூன் 2020): டிக்டாக் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் கட்டமைப்பு ஆகிவற்றுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்திய மத்திய அரசின் 69A சட்டம் ( Information Technology Act ) மூலமாக இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.