புதுடெல்லி (03 மே 2020): சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவில் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மேலும் ஊரடங்கு காலத்துக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அறிவுரைகள் வழங்கி வருபதாக அவர் தெரிவித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்த பரிந்துரைகளை பிரதமர் மோடி மற்றும் நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் கூறினார்.