சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகள் – பினராயி விஜயன் அதிரடி!

Share this News:

திருவனந்தபுரம் (18 மே 2020): கொரோனா நெருக்‍கடி இடையே தொடர்ந்து பணியாற்றி வரும் காவல்துறையினருக்‍கு ஓய்வளிக்‍கும் வகையில், ஒரு வாரம் பணி செய்து, ஒரு வாரம் ஓய்வெடுத்துக்‍கொள்ளும் திட்டத்தை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது.

கேரளாவில், கொரோனா அச்சுறுத்தலுக்‍கு இடையே பணி செய்யும் போலீசாருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய, 2 குழுக்‍கள் அமைக்‍கப்பட்டன.

இந்த குழுக்‍குள், மாநில அரசிடம் சில பரிந்துரைகளை அளித்துள்ளன. அதன்படி, போலீசார், ஒரு வாரம் பணி செய்து, ஒரு வாரம் ஓய்வெடுத்துக்‍கொள்ளும் திட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் 50 சதவீத பேர் மட்டுமே பணிபுரிந்தால் போதும் என்றும், தினமும் வாகன சோதனை நடத்த தேவையில்லை என்றும், கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே கைது செய்தால் போதும் என்றும், போலீசார் காவல் நிலையங்களுக்கு வராமல் நேரடியாக பணியிடத்துக்கு செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க நேரடியாக வருவதை முடிந்தவரை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக வாட்ஸ் ஆப் மற்றும் இ-மெயில் மூலம் புகார்களை அனுப்பலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Share this News: