டெல்லி காவல்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மிரட்டல்!

Share this News:

புதுடெல்லி (19 ஏப் 2022): விஎச்பி, பஜ்ரங்தள் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று டெல்லி காவல்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மிரட்டல் விடுத்துள்ளது.

ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை அனுமதியின்றி நடத்தியதற்காக அதன் ஏற்பாட்டாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, விஎச்பி தலைவர் பிரேம் சர்மாவை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இதனை காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) உஷா ரங்னானி பிடிஐயிடம் தெரிவித்தார்.

“விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் செயற்பாட்டாளர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதன்
செயல்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் நாங்கள் அறிந்தோம். இதன் மூலம் காவல்துறையினர் பெரிய தவறு செய்துவிட்டனர்,” என்று விஹெச்பியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியுள்ளார். .

மேலும் “இஸ்லாமிய ஜிஹாதிகள்” முன் காவல்துறை பணிந்துவிட்டதாகத் தெரிகிறது.” என்று பன்சால் கூறியுள்ளார். “அனுமதி இல்லை என்றால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான காவல்துறையினர் யாத்திரையில் (ஊர்வலத்தில்) எப்படி வந்தனர்?” எனவும் பன்சால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே இந்துத்துவா உறுப்பினர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய அல்லது அதன் செயல்பாட்டாளர்கள் யாரையாவது கைது செய்ய முயற்சித்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் ” என்று பன்சால் எச்சரித்துள்ளார்.


Share this News:

Leave a Reply