குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

Share this News:

லண்டன் (30 ஜன 2020): இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஏஏ.,வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் 5 அமைப்புகள் சார்பில் 6 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் கடந்த மாதம் விடுத்த அறிவிப்பில், சிஏஏ என்பது அடிப்படையில் பாகுபாட்டுடன் இருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும் இந்தச் சட்டம் , சர்வதேச மனித உரிமை விதிகளுக்கும், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே 2005 ஆண்டு நிறைவேற்றப்பட்ட மனித உரிமை ஒப்பந்தத்திற்கும் எதிராக இருப்பதாகவும் ஐரோப்பிய எம்பிக்கள் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிஏஏ.,வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்த 6 குழுக்களில், இ சி ஆர் எனப்படும் ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தக் குழு என்ற குழு தனது தீர்மானத்தை வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்து சிஏஏ.,வுக்கு எதிரான தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் வரும் மார்ச் மாதம் மீண்டும் கொண்டு வரப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த தீர்மானத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply