ஷார்ஜா (23 ஜன 2020): ஷார்ஜாவிலிருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பெண் ஷார்ஜா விமான நிலையத்தில் அவரது மொபைல் போனை தவற விட்டுவிட்டார்.
இந்தியாவுக்கு சென்ற அந்த பெண் அங்கு அவரது ட்விட்டரில் அவரது போனின் புகைப்படத்தை பதிவிட்டு காணாமல் போனது பற்றி தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் ஷார்ஜா விமான நிலைய போலீசுக்கு கிடைத்தது. உடனே ஷார்ஜா போலீஸ் விமான நிலையத்தில் போனை தேடி கண்டுபிடித்து. உடனே உரியவரிடம் ஒப்படைக்கும் வகையில் ஷார்ஜாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியாவில் போனை பெற்றுக் கொண்ட பெண், “உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை. சாதாரணமாக இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தேன் ஆனால் இதை பெரிதாக எடுத்து ஷார்ஜா போலீசார் செயல்பட்டது ஆச்சர்யம் அளிக்கிறது அவர்களுக்கு என் ராயல் சல்யூட்” என தெரிவித்துள்ளார்.