புதுடெல்லி (15 நவ 2021): திரிபுராவில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து செய்தி வெளியிட்ட இரண்டு பெண் பத்திரிக்கையாளர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எச்டிடபிள்யூ நியூஸ் என்கிற இணையதளத்தின் பத்திரிக்கையாளர்களான சம்ருதி ஷகுனியா மற்றும் ஸ்வர்ணா ஜா ஆகியோர் திரிபுராவிலிருந்து டெல்லி திரும்பி விடுதியில் தங்கியிருந்தபோது இருவரும் நேற்று இரவு 10:30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.