கண்ணனுர் (23 அக் 2022): கேரளாவில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கேரளா மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கூத்து பறம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (23). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் விஷ்ணுபிரியாவின் பாட்டி மரணமடைந்ததை அடுத்து விஷ்ணுபிரியாவின் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அக்டோபர் 22 ஆம் தேதி இறுதிச் சடங்கிற்காக சென்றுவிட்டனர்.
அப்போது விஷ்ணு பிரியா வீட்டில் தனியாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் இறுதிச் சடங்கு முடித்துக் கொண்டு அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் ஷ்ணுபிரியா கழுத்து துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விஷ்ணுபிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. இதில் விஷ்ணுபிரியாவுக்கு 18 இடங்களில் பலமான வெட்டு காயம் இருந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையில், கூத்துபறம்பு மானந்தேரி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷியாம்ஜித் என்பவரின் போனிலிருந்து விஷ்ணுபிரியாவின் போனுக்கு கடைசியாக அழைப்பு வந்தது தெரியவந்தது.
மேலும் சிசிடிவி காட்சிகள் மாறும் விஷ்ணுபிரியாவின் தோழி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஷியாம்ஜித் விஷ்ணுபிரியாவை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் விஷ்ணுபிரியாவோ அந்த இளைஞரை காதலிக்க மறுத்துவிட்டார். போலீஸார் ஷியாம்ஜித்திடம் விசாரித்ததில் அவர் விஷ்ணுபிரியா எங்கே தன்னை விட்டு போய் விடுவாரோ என்ற பயத்தில் கொலை செய்ததாக ஷியாம்ஜித் ஒப்புக் கொண்டார்.