ஜீ நியூஸ் சேனலுக்கு சீல் – 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Share this News:

நொய்டா (18 மே 2020): ஜீ மீடியா சேனல் பணியாளர்கள் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த சேனல் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலக அலவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கொரோனா தாக்கி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான ஜீ மீடியாவையும் அது விட்டு வைக்கவில்லை.

இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக இயக்குநர் சுதிர் சவுத்ரி தெரிவிக்கையில், ” எங்கள் ஊழியர்களில் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை COVID-19 ஆல் பாதிக்கப்பட்டார். ஒரு பொறுப்பான அமைப்பாக, அந்த நபருடன் நேரடி அல்லது மறைமுகமாக தொடர்பு கொள்ளக்கூடிய அனைவரையும் நாங்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தினோம்.

அதன்படி தற்போது 28 ஜீ மீடியா ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து ஜீ மீடியா அலுவலகம், செய்தி படப்பிடிப்பு தளம் ஆகியவற்றை சீல் வைத்ததோடு, வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளோம்.” என்றார்.

மேலும் அரசின் உத்தரவி முறையாக பின்பற்றி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜீ மீடியாவில் 2500 ஊழியர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.


Share this News: