வட மாநிலங்களுக்கு 5908 கோடி, தமிழகம் கேரளாவுக்கு நாமம்!

Share this News:

புதுடெல்லி (06 ஜன 2020): வெள்ள நிவாரணமாக வட மாநிலங்களுக்கு 5908 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ள மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு பெப்பே காட்டிவிட்டது.

கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு 5,908.56 கோடி ரூபாயை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் உத்திர பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும்.

ஆனால் பெரிதும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரளாவுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யபப்டவில்லை. அதேபோல கஜா புயலால் மிகப்பெரிய பேரழிவை சந்தித்த தமிழகத்திற்கும் மத்திய அரசு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply