மஸ்கட் (13 ஜன 2023): ஓமானில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற 121 கைதிகளை சுல்தான் ஹைதம் பின் தாரிக் விடுதலை செய்தார்.
அவர் பதவியேற்ற மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்களில் 57 பேர் வெளிநாட்டினர். கடந்த ஆண்டு 229 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
ஜனவரி 11, 2020 அன்று, சுல்தான் கபூஸின் வாரிசாக சுல்தான் ஹைதம் பின் தாரிக் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல், ஓமன் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான திட்டங்கள், உள்நாட்டவர், வெளிநாட்டினரைக் கருத்தில் கொண்டு வகுக்கப்படுகின்றன.
மேலும் எண்ணெய் அல்லாத துறைகளில் இருந்து வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.