துபாய் (03 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புத்தாண்டு தினத்தன்று 18 பேர் கொண்ட ஒரு குழு உணவுக்காக 620,926.61 திர்ஹம்களை (இந்திய ரூபாயில் ரூ.1 கோடியே 40 லட்சம்) செலவழித்துள்ளது.
இந்தத் தொகையை பில் செய்த உணவகத்தின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்துள்ளார்.
துபாயில் உள்ள Gall Restaurant, 18 விருந்தினர்களுக்கு இவ்வளவு பெரிய கட்டணத்திற்கான உணவை வழங்கியுள்ளது.
உணவகத்தின் உரிமையாளர் மெர்ட் டர்க்மென் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பில்லின் படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
இந்த உணவகம் துருக்கிய மற்றும் கடல் உணவு வகைகளை தயாரித்து வழங்கும் உணவகமாகும்.