அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் ‘சீ வேல்ட் அபுதாபி’ நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது விழாவில் எமிரட்டி சூப்பர் ஸ்டார் உசேன் அல் ஜாஸ்மின் மற்றும் ஸ்காட்ரிஸ்ட் ரெக்கார்டிங் கலைஞர் ரேட் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன மேலும் 120 இசைக் கலைஞர்களின் விறுவிறுப்பான ஆர்கெஸ்ட்ராவும் இடம்பெற்றது இந்த தீம் பார்க் இன் பொது மேலாளர் தாமஸ்…

மேலும்...

புகழ்பெற்ற துபாய் மாலின் பெயர் மாற்றம்!

துபாய் (24 ஜன 2023): துபாயின் சின்னம் என்று பலராலும் சிலாகித்து வர்ணிக்கக்கூடிய “தி துபாய் மால்” அதன் பெயரை மாற்றுகிறது. உலகின் மிக உயரமாக கட்டடமான புர்ஜ் கலீஃபாவின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் தற்போதைய பெயர் “தி துபாய் மால்” பெயரில் இதுவரை “தி துபாய் மால்” என்று அழைக்கப்பட்டு வந்த இது இனி வெறும் ‘துபாய் மால்’ என்று மட்டும் அழைக்கப்படும். துபாய் மால் நிறுவனம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பெயரை…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைத்தரகர்களை ஒழிக்க நடவடிக்கை!

அபுதாபி (23 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசா விவகாரங்களில் இடைத்தரகர்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக ஆன்லைன் மூலம், ஸ்மார்ட் விசா மற்றும் அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் செய்யலாம். மேலும் பிழைகளை திருத்தலாம். விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி தகவலை மாற்ற ஐந்து படிகள் முடிக்கப்பட வேண்டும். அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) இணையதளம் அல்லது www.icp.gov.ae இல் உள்ள UAE ICP ஸ்மார்ட் ஆப்…

மேலும்...

துபாயில் முக்கிய சாலைகளில் வாகனங்களுக்கான வேக வரம்பு மாற்றம்!

துபாய் (13 ஜன 2023): துபாயின் முக்கிய சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் குறைத்துள்ளது. தற்போதுள்ள அதிகபட்ச வேகமான 100 கிமீ வேகம் மணிக்கு 80 கிமீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. துபாய் காவல்துறை தலைமையகம் மற்றும் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இணைந்து இந்த புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. 100 கிமீ வேக…

மேலும்...

அபுதாபியில் முதல் இந்து கோவில்; புதிய வடிவமைப்பை தேர்வு செய்தார் யூஏஇ அதிபர்!

அபுதாபி (11 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியில் முதல் இந்து கோவிலின் வடிவமைப்பை தேர்வு செய்தார். வளைகுடா ஊடகமான கலீஜ் டைம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளது. வழக்கமான கோவிலுக்கு பதிலாக, பாரம்பரிய கற்கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, கோவிலின் பொறுப்பாளர் பிரம்மவிஹாரிதாஸ் சுவாமி தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடியுடன் கோவிலின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகையில் ஷேக் முகமதுவைச் சந்தித்து கோவிலின் இரண்டு திட்டங்களைக்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

துபாய் (11 ஜன 2023): ஐக்கிய அரபு அமீரகத்தின் வடகிழக்கு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலை 16 டிகிரி வரை குறையலாம். பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மக்கள் கவனமுடன் இருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், கனமழையின் போது ஆபத்தான முறையில் ஓட்டப்பட்ட 90 வாகனங்களை துபாய் போலீஸார் பறிமுதல் செய்தனர். அல் ருவையா பகுதியில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் இந்த மாதம் முதல் புதிய பேருந்து கட்டணம்!

துபாய் (04 ஜன 2023): அஜ்மான் போக்குவரத்து ஆணையம் புதிய பேருந்து கட்டணத்தை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து கட்டணம் இம்மாதம் 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பஸ் டிக்கெட்டுகளை மஸார் அட்டை அல்லது நேரடி கட்டணம் மூலம் வாங்கலாம். துபாய் செல்லும் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் ஜனவரி 23 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது பஸ் கட்டணம் மஸார் அட்டை மூலம் செலுத்தினால் 3 திர்ஹமும், பணமாக…

மேலும்...

ஒரே வேளைக்கு 18 பேர் உணவு சாப்பிட்ட தொகை ரூ.1 கோடியே 40 லட்சம்

துபாய் (03 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புத்தாண்டு தினத்தன்று 18 பேர் கொண்ட ஒரு குழு உணவுக்காக 620,926.61 திர்ஹம்களை (இந்திய ரூபாயில் ரூ.1 கோடியே 40 லட்சம்) செலவழித்துள்ளது. இந்தத் தொகையை பில் செய்த உணவகத்தின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்துள்ளார். துபாயில் உள்ள Gall Restaurant, 18 விருந்தினர்களுக்கு இவ்வளவு பெரிய கட்டணத்திற்கான உணவை வழங்கியுள்ளது. உணவகத்தின் உரிமையாளர் மெர்ட் டர்க்மென் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பில்லின் படத்தை வெளியிட்டுள்ளார்….

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் எச்சரிக்கை!

துபாய் (02 ஜன 2023): ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அபுதாபி காவல்துறை, வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், பல்வேறு சாலைகளில் மங்களாக காணப்படும் என்பதால் வேக வரம்புகளில் மாற்றங்களைக் கவனிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அபுதாபியில் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை!

துபாய் (28 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வெளியே செல்லும் போதும் வாகனம் ஓட்டும் போதும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஷார்ஜா அஜ்மான் ராஸ் அல் கைமாவில் காலை முதல் பலத்த மழை பெய்து…

மேலும்...