கத்தார் (11 மார்ச் 2020): சற்றுமுன் வெளியான அறிவிப்பின்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்போரின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், கத்தரில் பணிபுரியும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் நூற்றுக் கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மளமளவென்று பரவியுள்ளது.
இதனால், அக்கட்டிட வளாகத்தில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளதாக கத்தர் அமைச்சகம் அறிவித்துள்ளது. (இந்நேரம்.காம்)
பாதிப்படைந்த அனைவருக்கும் தனிமைப்படுத்தப் பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.
இது தொடர்பாக, கத்தர் சுகாதார அமைச்சகம் துரிதமாக அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அதில், பரவும் வைரஸ் பற்றி மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், தனிநபர் தத்தம் அடிப்படை சுகாதாரத்தைப் பேணிக் கொண்டால் போதுமானது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், பரவி வரும் அநாவசிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், புதிய தகவல்களை அறிய https://www.moph.gov.qa/english/Pages/default.aspx அல்லது https://www.facebook.com/MOPHQatar/ அல்லது https://twitter.com/MOPHQatar ஆகிய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களை பார்வையிடுமாறும், கூடுதல் தகவல் தேவைப்படுவோர் 16000 என்ற இலவச சேவையைப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.