புதுடெல்லி (11 மார்ச் 2020): பா.ஜ.க.வில் சேர்ந்த சில மணி நேரங்களில் மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களை தேர்தல் வேட்பாளராக ஜோதிராதித்யா சிந்தியாவை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் வலுவான மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார். பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசிய அவர் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்தார்.
ஜோதிராதித்ய சிந்தியாவை நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக்கி மத்திய மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி விரும்புவதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், ஜோதிராதித்யா அக்கட்சியில் இன்று இணைந்தார்.
இந்நிலையில், பாஜகவில் சேர்ந்த சில மணி நேரங்களில் மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களை தேர்தல் வேட்பாளராக ஜோதிராதித்யா சிந்தியாவை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.