கொரோனா வைரஸ் பாதிப்பால் இரானில் 6 பேர் பலி!

Share this News:

தெஹ்ரான் (23 பிப் 2020): இரானில் கொவைட்-19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,442ஆக ஞாயிற்றுக்கிழமை உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76,936க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 123 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 556ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் 79 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். அதுபோன்று இரானிலும் கொவைட்-19 பாதிப்பால் 6 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 28 நாடுகளில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கொரோனா வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500ஆக அதிகரித்து காணப்படுகிறது.


Share this News:

Leave a Reply