புதுடெல்லி (23 பிப் 2020): ரூ 2000 ரூபாய் செல்லாது என்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் 1 முதல் இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படலாம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஏற்கனவே 2000 ரூபாய் நோட்டின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படலாம் என்ற தகவலும் உண்டு. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள், இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தடை செய்வதற்கான எண்ணம் தற்போது வரை மத்திய அரசிடம் இல்லை. இதனால் அச்சமின்றி மக்கள் ரூ.2000 நோட்டுக்களை பயன்படுத்தலாம். இந்தியன் வங்கி ஏடிஎம்களில் மட்டுமே ரூ 2000 ரூபாய் வைக்கப்பட மாட்டாது என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் கிளைகளில் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை அளித்து, ரூ.2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.