ஜித்தா (16 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி காய்ச்சல், வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்கேன் செய்து பார்த்ததில் இடுப்புப் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது.
நடைமுறைகள் முடிந்து இன்று பிற்பகல் அல் பைசலியா சமாதியில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என ஜித்தா கேஎம்சிசி தெரிவித்துள்ளது.