ஜித்தா விமான நிலையத்தில் நெரிசலை நீக்க நடவடிக்கை!
ஜித்தா (22 ஜன 2023): சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா விமான நிலையத்தின் செயல்பாடுகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ரமலான் மாதத்தில், ஜித்தா விமான நிலையத்தில் பல பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் சரியான நேரத்தில் புறப்பட முடியாமலும், விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமலும் சிரமப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பிறகு விசாரணையில் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குழுக்களாக வரும் உம்ரா யாத்ரீகர்களின் தன்மை, அதிக அளவு மற்றும் சாமான்களின் எடை, பணியாளர் எண்ணிக்கை…