கொரோனா வார்டு தனிப்படுத்தல் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 92 பேர் பலி!

Share this News:

பாக்தாத் (14 ஜூலை 2021):ஈராக் கொரோனா கொரோனா வார்டு தனிப்படுத்தல் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 92 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஈராக் நசிரியா நகரில் அல் ஹுசைன் போதனா மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தனிமப் படுத்தல் வார்டில் இந்த தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

முன்னதாக, மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியிருந்தனர், ஆனால் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. மற்றொரு அதிகாரி ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்தபோது தீப்பிடித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் பத்திரிகையாளர்களுடன் பேச அதிகாரம் இல்லாததால் அவரது பெயரை அவர் தெரிவிக்கவில்லை.

தீ விபத்தை அடுத்து பிரதமர் முஸ்தபா அல் காதிமி அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார்கள் பின்பு நசிரியா அமைந்துள்ள தி கார் மாகாணத்தில் சுகாதார இயக்குநரை இடைநீக்கம் செய்வதோடு அவரை கைது செய்ய உத்தரவிட்டார், மேலும் இந்த தீவிபத்து குறித்து விசாரணையும் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இப்னுல் கதீப் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 82 பேர் இறந்தனர், ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் தீப்பிடிதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *