பட்டாசுக்கடையில் திடீர் தீ – 4 பேர் உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி (26 அக் 2021): கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சிக்கி…