குவைத் (14 ஜூலை 2021): குவைத்தில் 60 வயதுக்கு மேல் உள்ள வெளிநாட்டவர்களின் உரிமத்தை (இக்காமா) புதுப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
குவைத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 157 வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கள் இகாமாவை புதுப்பித்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 35 ஊழியர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இளங்கலை பட்டம் பெற்ற 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு பணி அனுமதி புதுப்பிக்கப்படலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரிய சிறப்பு கல்வித் தகுதி இருந்தால் புதுப்பிக்கப்படுவார்கள். 70 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் குடியிருப்பு புதுப்பிக்கப்பட்ட மாட்டாது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதைத் தாண்டி, 157 வெளிநாட்டவர்கள் குடியிருப்பு அனுமதி புதுப்பிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.