ரியாத் (13 பிப் 2020): சாலைகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொறுத்தி சவூதி போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சவூதியில் விபத்துக்களை குறைக்கும் வகையில் பல சாலைகளில் புதிய கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவோ, அல்லது உரிமம் ரத்துச் செய்யப்படவோ வாய்ப்பு உள்ளது.
மேலும் தான் செல்லும் ட்ராக்கை அவசியமில்லாமல் விதிகளை மீறி மாறினாலும் கேமரா கண்டுபிடித்து எச்சரித்துவிடும். இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் அதிக அபராதங்கள் செலுத்த வாய்ப்பு உள்ளது. எனவே வாகனம் ஓட்டும்போது விதிகளை மதித்து வாகனம் ஓட்டுங்கள்.