ஐலவ்யூ விஜய் – பாஜகவின் திடீர் பாசம்!

Share this News:

கோவை (13 பிப் 2020): நடிகர் விஜயை நான் தனிப்பட்ட முறையில் மிகவும் நேசிக்கிறேன் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “கோவையில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. .

கோவையில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் குமரியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களை காவல் துறையால் கட்டுப்படுத்த இயலவில்லை. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்க விடக்கூடாது.

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரிசோதனை என்பது வழக்கமான நடைமுறைதான். எங்களுக்கும், விஜய்க்கும் எந்தப் பகையும் இல்லை. நெய்வேலி சுரங்க ஆலைக்கு யார் சென்றாலும், கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தது எப்படி சரியாக இருக்கும். நெய்வேலி சுரங்க நிர்வாகம் சினிமா ஷூட்டிங்கிற்கு மத்திய மந்திரியைக் கேட்டு அனுமதி கொடுக்கவில்லை, தன்னிச்சையான அமைப்பு என்பதால் அந்த நிர்வாகமே அனுமதி கொடுத்துள்ளது.

மற்றபடி விஜய் படங்களை நானே ரசித்திருக்கிறேன். பொன்.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணனிடமே கோபப்பட முடியுமா? தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன். அப்படி இருக்கும்போது அவரை நான் எப்படி வெறுக்க முடியும்?.

டெல்லியில் கடந்த தேர்தலைவிட, தற்போதைய தேர்தலில் பி.ஜே.பி அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திறமைசாலி. நுணுக்கங்கள் தெரிந்த டிரைவர். ஆனால், தற்போது தமிழகத்தில் அவர் ஓட்டும் கார், ரேஸுக்கு தகுந்த கார் அல்ல. அது 50 ஆண்டுகள் பழைமையான கார். 4 டயர்கள் இல்லாத தி.மு.க என்ற காருக்கு பிரசாந்த் கிஷோர் டிரைவாகி உள்ளார்.” என்றார்.


Share this News:

Leave a Reply