தனி ஒருத்தியாக கேரளா-கத்தார் ஜீப் பயணத்தில் அசத்திய நாஜிரா!

கத்தார் (07-12-2022): கால்பந்து விளையாட்டின் மீதும் பயணங்களின் மீதும் அளவுகடந்த காதல். இதை வைத்து தனியொரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? கேரளா-வின் கண்ணூர் நகரத்தில் இருந்து தோஹா-கத்தாருக்கு மஹிந்த்ரா ஜீப்பில் தனியாளாக பயணித்து கத்தார் வந்திருக்கிறார். இவர் நாஜிரா நவ்ஷாத் என்ற இளம்பெண். திருமணமாகி கணவர் குழந்தைகளோடு வசித்தாலும், தனிமைப் பயணத்தில் மிகவும் நாட்டமுடையவர். சிறுவயது முதல் அர்ஜென்டினாவின் தீவிர ரசிகையான இவர், கத்தாரில் நடைபெறும் FIFA World Cup 2022 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில்…

மேலும்...

உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்!

தோஹா (02 டிச 2022): தோஹாவின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலகக் கோப்பை ரசிகர்களை அன்பால் போர்த்தி இனிப்புகளுடன் வரவேற்கும் கத்தார் சிறுவர் சிறுமிகளைப் பார்த்து கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலிர்த்துப் போகின்றனர். அரபு நாடுகள் மற்றும் கத்தாரின் விருந்தோம்பலை இந்த குழந்தைகள் உலகிற்கு காட்டி ஆச்சர்யப்படுத்துகின்றனர். உலகக் கோப்பை கால்பந்துக்கு வரும் ரசிகர்களின் முக்கிய பயண பாதை தோஹா மெட்ரோ ஆகும். போட்டி நேரத்தில் மெட்ரோ நிரம்பியிருக்கும். ஒவ்வொரு நிலையமும் வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் கலவையாகும்….

மேலும்...

கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தா இந்தியா வர அழைப்பு!

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார், கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி அசிம் வெலிமன்னா. அசிம் வெலிமன்னா உலகக்கோப்பை போட்டியை காண்பதற்காக கத்தார் வந்துள்ளார். அவரை கானிம் அல் முஃப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தனர். இந்நிலையில் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு அழைத்துள்ளார் அசிம் வெலிமன்னா. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான போராட்டங்களில் குறிப்பிடத் தக்கவர் ஆசிம் என்பது…

மேலும்...

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து சவூதி அணியின் கேப்டன் விலகல்!

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து காயம் காரணமாக சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் விலகியுள்ளார். கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை காரணமாக போட்டியிலிருந்து விலக்கப் பட்டுள்ளார். சல்மான் அல்-ஃபராஜ் தொடர்ந்து விளையாட முடியாது என்கிற மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அவர் உலகக் கோப்பை போட்டியிலிருந்து…

மேலும்...

ஒட்டகக் காய்ச்சல் – கத்தார் உலகக் கோப்பை கால்பந்துக்கு ஆபத்தா? உண்மை நிலவரம்!

தோஹா (27 நவ 2022): வளைகுடா நாடான கத்தாரில் 2022 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில், பிற மேற்கத்திய நாடுகளில் இதுவரை நடந்த உலகக் கோப்பை போல் அல்லாமல் பல கட்டுப்பாடுகளை கத்தார் அரசு விதித்துள்ளது. குறிப்பாக மதுபானம், ஓரினச் சேர்க்கை, விபச்சாரம், ஆடைக் குறைப்பு உள்ளிட்டவைகளில் கத்தார் அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதனால் மேற்கத்திய நாடுகள், கத்தார் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி…

மேலும்...

பிரமாண்டமாகத் துவங்கியது கத்தார் உலகக் கால்பந்து போட்டி!

கத்தார் (தோஹா): உலகக் கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup 2022) கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு (21-11-2022) தொடங்கியது. துவக்க நிகழ்ச்சியாக கே-பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். கத்தார் மற்றும் எக்வடோர் நாட்டிற்கு இடையிலான குரூப் ஏ-வின் முதல் போட்டிக்கு முன்பாக கத்தார் ரசிகர்கள், அல் கோரில் அமைந்திருக்கும் அல் பைத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கண்டு…

மேலும்...