ரியாத் (22 ஆக 2021): கோவிட் கட்டுப்பாடுகளை மீறி குடும்ப கூட்டங்கள் நடத்தினால் 10 ஆயிரம் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். என்று சவூதி உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
சவூதி அரேபியாவில் கோவிட் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அது மேலும் பரவாமல் தடுக்க சவூதி அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது
அதன்படி அதிகப்படியாக கூடும் கூட்டங்களால்தான் கோவிட் பவரால் அதிகரிக்கிறது என்பதால் கூட்டம் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சவுதியில் குடும்ப நிகழ்வுகளுக்கு தடையில்லை. அதேவேளை குடும்ப நிகழ்வுகளில் கோவிட் நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் 10,000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். என்று சவூதி உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மேலும் முதல் முறை 10,000 ரியால் அதற்கு அடுத்த முறை அபராதம் இரட்டிப்பாகும். தொடர்ந்து விதிகளை மீறினால் ஒரு லட்சம் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளபப்டும் என்று சவூதி உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.