சென்னை (21 ஆக 2021): பிரபல நடிகை சித்ரா மாரடைப்பால் உயிரிழந்தார்.
1990கலில் பெரும்பாலான நடிகர்களுக்கு தங்கையாக நடித்தவர் நடிகை சித்ரா. இவர், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக நடித்து புகழ் பெற்றார்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன், நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான கோபாலா கோபாலா, பொண்டாட்டி ராஜ்ஜியம், சின்னவர் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து உள்ளார். மேலும் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தவர்.
இந்த நிலையில், சென்னை சாலி கிராமத்தில் வசித்து வந்த நடிகை சித்ரா தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.