தோஹா (27 ஜூலை 2021): கோவிட் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கத்தார் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கத்தார் அரசின் தகவல் தொடர்புத் துறை புதிய டிஜிட்டல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கத்தாருக்கு பயணம் செல்பவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டி www.gco.gov.qa/en/travel என்ற இணைய தளத்திற்குச் சென்று அங்கு கேட்கப் பட்டுள்ள ஆறு கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது.
பயணிகள் புறப்படும் நாடு, கோவிட் நிலை, உடன் வரும் குழந்தைகள் மற்றும் சமீபத்தில் சென்ற நாடுகள், பெட்ரா தடுப்பூசி போன்ற ஆறு கேள்விகளுக்கான பதிலைக் கிளிக் செய்யவேண்டும்.
இப்பக்கத்தில் ஒரு பயணி தரும் தகவல்களின் அடிப்படையில், அவரது பயணம் தொடர்பான விதிமுறைகள், தனிமைப் படுத்தல்கள், இன்ன பிற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.