ரியாத் (26 டிச 2022): சவுதி அரேபியாவில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறையின் புதிய திட்டங்களால் வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இதுவரை, 32 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதியில் உள்ளா சுற்றுலா இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
2015ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 64 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் 81 பில்லியன் ரியால்களை செலவிட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதுவரை 32 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு வருகை தந்துள்ளனர்.