துபாய் ஷேக் ரஷித் பின் சயீத் நடைபாதை மறு சீரமைப்பு முதல் கட்டம் நிறைவு!

Share this News:

துபாய் (26 டிச 2022): துபாய் ஷேக் ரஷீத் பின் சயீத் காரிடார் புனரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

துபாய்-அல் ஐன் சாலை சந்திப்பில் இருந்து நாட் அல் ஹமர் வரையிலான நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

சாலையின் இருபுறமும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், துபாய் க்ரீக் துறைமுகத்திற்கான அனைத்து பாலங்களும் திறக்கப்பட்டுள்ளதாகவும் துபாய் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​ஒரு மணி நேரத்திற்கு 10,600 வாகனங்கள் கடந்து செல்கின்றன. திட்டம் முடிந்ததும், ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இருந்து துபாய்-அல் ஐன் சாலை சந்திப்பை ஏழு நிமிடங்களில் அடைய முடியும் என்றும் துபாய் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply