தோஹா (25 பிப் 2021): கத்தர் நாட்டில் விசிட் விசாவில் வருபவர்களுக்கும் மருத்துவ காப்பீடு அவசியமாக்கப்பட்டுள்ளது.
கத்தார் சுகாதார சேவைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மசோதாவின் விதிகளின்படி, நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களுக்கும் விசிட்டில் வருபவர்களுக்கும் அடிப்படை சுகாதார சிகிச்சை உள்ளிட்ட சுகாதார சேவைகள் சிறப்பு மருத்துவ காப்பீடு இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
அமைச்சரவை ஒப்புதல் அளித்த வரைவு ஷூரா கவுன்சிலுக்கு அனுப்ப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
இந்த வரைவின்படி திறமையான, தரமான மற்றும் நிலையான சுகாதார பராமரிப்பு முறையை உருவாக்குவதே நோக்கம். தற்போது, நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை ஹமாத் மருத்துவக் கழகத்தின் மருத்துவ அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. நாட்டின் விசா உள்ளவர்கள் மட்டுமே சுகாதார அட்டையைப் பெற முடியும் என்பதால் விசிட் விசாக்களில் வருபவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது.
அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு சிறப்பு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால் புதிய சட்டம் நடைமுறையில் இருப்பதால், விசாக்கள் மற்றும் விசிட்டில் வருபவர்களுக்கு அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற மருத்துவ காப்பீட்டு அட்டை அவசியமாகும்.