மீனவர்களுடன் மீன்பிடித்த ராகுல் காந்தி!

Share this News:

கொல்லம் (25 பிப் 2021): காங்கிரஸ் கட்சியின் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரமாக உலா வருபவர் ராகுல் காந்தி.

அவர் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பார், அந்த வகையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக கேரளாவின் கொல்லம் மாவட்டத்திற்கு பயணம் செய்தபோது அங்குள்ள தங்கசேரி கடற்கரைக்குச் சென்றார்.

அப்போது கடலில் குதித்தார். பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல் அங்குள்ள மீனவர்களுடன் படகில் பயணம் செய்தார். அங்கு அவர்கள் சமைத்த மீனை அவர்களோடு சேர்ந்து ராகுலும் சுவைத்தார்.

அப்போது சில மீனவர்கள் மீன் பிடிக்க வலையை வீசினர். பின்னர் அவர்கள் கடலில் குதிப்பதைக் கண்ட ராகுல் திடீரென படகில் இருந்து குதித்தார்.இதனையடுத்து ராகுல் காந்தி கரைக்குத் திரும்புவதற்கு முன்பு மீனவர்களுடன் சுமார் 10 நிமிடங்கள் நீந்தினார்.


Share this News:

Leave a Reply