ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

துபாய் (03 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூடுபனியும் கூடும் என மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பனிமூட்டம் காரணமாக, வாகனங்களை மெதுவாகச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பின்வரும் சாலைகளில் வேகக் குறைப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: Al Saad – Sweihan road: 80 km/h Trucks…

மேலும்...

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை!

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம்! தோஹா (15 டிச 2021): கத்தாரில் மானிய விலை பொருட்களை விற்பனைக்கு உட்படுத்தினால் 5 லட்சம் ரியால் அபராதமும் 1 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படும். நேற்று முன் தினம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், மானிய விலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மானியம் வழங்கப்படும் பொருட்களை ஏற்றுமதி…

மேலும்...

வளைகுடா இந்தியர்களின் ஊதிய நிர்ணயத்தை திரும்பப்பெற்றது ஒன்றிய அரசு!

புதுடெல்லி (30 ஜுலை 2021): வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெறுகிறது வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு குறைத்தது. இது முந்தைய குறைந்தபட்ச ஊதியத்தைவிட 30% முதல் 50% வரையாகும். கோவிட் காரணமாக. வளைகுடாவில் இந்தியர்கள் வேலை இழப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்றிய அரசின் முந்தைய இந்த உத்தரவு வெளிநாட்டில்…

மேலும்...

வளைகுடா நாடுகளுக்காக துபாயில் நீட் தேர்வு மையம்!

துபாய் (24 ஜூலை 2021): வளைகுடா நாட்டு மாணவர்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குவைத்தில் நீட் தேர்வு மையம் உள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தை தவிர, பிற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக துபாயில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் வெள்ளிக்கிழமை முதல் துபாயில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . சவூதி…

மேலும்...

குவைத்தில் சட்ட விரோதமாக 60 வயதுக்கு மேல் இக்காமா புதுப்பித்தது குறித்து விசாரணை!

குவைத் (14 ஜூலை 2021): குவைத்தில் 60 வயதுக்கு மேல் உள்ள வெளிநாட்டவர்களின் உரிமத்தை (இக்காமா) புதுப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது. குவைத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 157 வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கள் இகாமாவை புதுப்பித்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 35 ஊழியர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குவைத்தில் இளங்கலை பட்டம் பெற்ற 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு பணி அனுமதி புதுப்பிக்கப்படலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரிய சிறப்பு கல்வித் தகுதி…

மேலும்...

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் கத்தார் நாட்டிற்கு அங்கீகாரம்!

தோஹா (10 ஜூலை 2021): கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளில் கத்தார் நாடு இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஜெர்மன் பத்திரிகையான ‘டெர் ஸ்பீகல்’ வெளியிட்டுள்ள பட்டியலில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. லக்சம்பர்க், நோர்வே மற்றும் டென்மார்க் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. ஆசிய நாடுகளான தைவான் ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் ஆறாவது இடத்திலும், ஜப்பான் ஏழாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் கத்தார் உலகளவில் 15 வது இடத்தில் உள்ளது….

மேலும்...

மிகக் குறைவான வாழ்க்கை செலவை உள்ளடக்கிய நகரம் குவைத்!

குவைத் (07 ஜூலை 2021): வளைகுடா நாடுகளில் மிகக் குறைவான செலவு செய்யக்கூடிய நகரம் என்ற சிறப்பை குவைத் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நம்பியோ இன்டெக்ஸ் என்ற வலைத்தளம் இதுகுறித்த பட்டியல் ஒன்றை வெளியிடும். அது வெளியிட்டுள்ள பட்டியலில் வளைகுடாவில் அதிக வாழ்க்கைச் செலவு கொண்ட நகரங்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் தினசரி தேவைகள் மற்றும் உணவு, செலவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்…

மேலும்...

சட்டவிரோத பண வசூல் – தொண்டு நிறுவனங்களுக்கு சவூதி அரசு கடும் எச்சரிக்கை!

ரியாத் (28 ஜூன் 2021): சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக வசூலில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்கள் மீது சவூதி அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சவுதியில் தொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​அல்லது பணம் திரட்டவோ அனுமதிக்கப் படுவதில்லை. மாறாக, அரசாங்க அலுவலகத்தை அணுகி முறையாக விண்ணப்பித்து அதிகாரப் பூர்வமாக அனுமதி பெற்ற பின்பே பண வசூல் எதுவும் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபட்டதற்காக…

மேலும்...

கோடைக்கால விடுமுறை – கத்தார் கல்வி அமைச்சகம் எச்சரிக்கை!

தோஹா (05 மார்ச் 2021): கத்தார் நாட்டில் பள்ளி ஆசிரியர்கள் குறுகியகால கோடை விடுமுறையில் விமான பயணம் மேற் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்குப் பிறகு மார்ச் 13 முதல் மார்ச் 18 வரை விடுப்பு கிடைக்கும். கோவிட் கால சூழலாக இருப்பதால் குறுகிய விடுப்பில் விமான பயணம் மேற்கொண்டால் சரியான நேரத்தில் கத்தாதிரும்புவது கடினம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 21 முதல் கோவிட் தடுப்பூசி போடாத ஊழியர்களை…

மேலும்...

பாலஸ்தீன முன்னேற்றத்திற்கான பைடன் திட்டம் – அரபு நாடுகள் வரவேற்பு!

துபாய் (28 ஜன 2021): பாலஸ்தீனத்திற்கு சாதகமாக தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற பைடன் நிர்வாகத்தின் முடிவை அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. அமெரிக்க அதிபர் பைடன் ஆட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம், முஸ்லீம் நாடுகள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடையை நீக்கினார். இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தால் முடிவுக்கு வந்த பாலஸ்தீனத்துடனான இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்க உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனிய சமூகம் மீது “அனுதாப நிலைப்பாட்டை” எடுக்கும் என்று பிடன்…

மேலும்...