ரியாத் (27 டிச 2022): இந்தியா – சவுதி வர்த்தகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் 67 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளாக கருதப்படுகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரையிலான பத்து மாதங்களில் சவூதி-இந்திய வர்த்தகம் 16,820 கோடி ரியாலாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 100.8 பில்லியன் ரியாலாக இருந்தது. இந்த ஆண்டு 67 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு சவுதி அரேபியாவின் வெளிநாட்டு வர்த்தகம் 46.8 சதவீதம் அதிகரித்து 1.89 டிரில்லியன் ரியால்களாக உள்ளது.