பாரத் ஜோடோ யாத்திரை மூலம் உத்திர பிரதேசத்தில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் காங்கிரஸ்!

Share this News:

புதுடெல்லி (27 டிச 2022): 2024 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளின் தலைமையை தக்க வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

பாரத் ஜோடோ யாத்ராவின் உத்தரபிரதேச சுற்றுப்பயணத்திற்கு SP மற்றும் BSP இரண்டும் அழைக்கப்பட்டுள்ளன.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பி.எஸ்.பி. தலைவர் மாயாவதி, ஆர்.எல்.டி. காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் பலர் ஜோடோ யாத்திரைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பாரத் ஜோடோ யாத்ரா மூலம் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே இதன் நோக்கம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை ஜனவரி 3ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நுழைகிறது. காஜியாபாத்தில் உள்ள லோனியில் உத்தரப் பிரதேசத்தில் நுழைந்த யாத்திரை, பாக் பாத் மற்றும் ஷாம்லி வழியாக ஹரியானாவுக்குச் செல்லும்.


Share this News:

Leave a Reply