புதுடெல்லி (13நவ 2021): துபாய் செல்லும் இந்திய பயணிகளுக்கு விமான நிலையத்தில் எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை நிறுத்த இந்தியா ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
தற்போதைய விதிகளின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணிக்கும் பயணிகள் தங்கள் ஆர்டிபிசிஆர் சோதனையைப் பெறுவதற்கு விமான நிலையத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே வர வேண்டிய நிலை உள்ளது
இதனால் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனைத் தேவையை நீக்குமாறு இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் தனது சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையின் விலை அதிகம் என்பதும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் பயணிகளால் அடிக்கடி எழுப்பப்படும் பிரச்சினையாகும் என்று யுஏஇக்கான இந்திய தூதர் பவன் கபூர் செய்தியாளர்களிடம் கூறினார்.