தம்மாம் (29 ஜூலை 2022):சவூதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற இந்தியர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பினார்.
சவுதி அரேபியா தம்மாமில் ஒரு சலவை நிலையத்தில் பணிபுரிந்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் ஹுசைன் மற்றும் தாமஸ் மேத்தியூ ஆகியோருக்கு இடையே கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் ஜாகிர் ஹுசைன் தாமஸ் மேத்தியூவை கத்தியால் குதியுள்ளார்.
படுகாயம் அடைந்த தாமஸ் மேத்தியூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளி ஜாகீரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சவூதி நீதிமன்றம் ஜாஹிருக்கு 8ஆண்டு சிறை தண்டனையும் மரண தண்டனையும் அளித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் பல்வேறு தன்னார்வலர்கள் முயற்சியால் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஜாகீரை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க தாமஸ் மேத்தியூ குடும்பத்தை அணுகி ஜாகீரை மன்னிக்கும்படி கோரினர்.
ஆரம்பத்தில் மறுத்த தாமஸ் கும்பத்தினர் பலகட்ட முயற்சிக்குப் பின்பு மன்னிப்பதாக கூறினர். மேலும் சவூதி நீதிமன்றத்திற்கு ஜாகீரை மன்னிக்கும் கடிதத்தை அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மரண தண்டனையிலிருந்து விடுதலையான ஜாகிர் வியாழன் அன்று நாடு திரும்பினார்.