ரியாத் (11 ஜூலை 2021): இந்தியாவில் கோவிட் பாதிப்பு ஒருபுறம் என்றால் கேரளாவில் ஜிகா வைரஸும் பரவி வருவதால் சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கலில் சிக்கல் ஏற்படுமோ என்று இந்தியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கொரொனா பாதிப்பு உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது இந்தியாவில் கொரானா குறைந்து வருவதால் திருப்தி அடைந்து வரும் வளைகுடா வாழ் இந்தியர்கள் கடந்த ஒன்றரை வருடமாக தடையில் உள்ள விமான போக்குவரத்து விரைவில் தொடங்கலாம் என்கிற எதிர் பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸும் பரவ தொடங்கியுள்ளதால் வளைகுடாவிற்கான விமான போக்குவரத்துக்கான தடை தொடருமோ என்று வளைகுடா வாழ் இந்தியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வளைகுடாவில் உள்ள அனைத்து செய்தி சேனல்கள், மற்றும் ஊடகங்களில் இந்தியாவின் நிலையை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா தடுபூசிக்கு பதில் உப்புத்தண்ணீரை செலுத்தியது. போன்ற மோசடிகளும் வளைகுடா ஊடகங்கள் வெளியிட்டு கவலை தெரிவித்துள்ளன.