திருவனந்தபுரம் (12 ஜூலை 2021): கேரளாவில் கோவிட் தொற்று பரவலும், ஜிகா வைரஸ் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கேரளாவில் 22 மாத குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இத்துடன் மாநிலத்தில் மொத்தம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கேரளாவில் கோவிட் தொற்று பரவலும், ஜிகா வைரஸ் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கேரளத்துக்கு உதவ மத்திய நிபுணர் குழு அம்மாநிலத்துக்கு விரைந்துள்ளது.