சவூதி அரேபியாவில் ஜம் ஜம் தண்ணீர் ஆய்வு அதிகரிப்பு!

Share this News:

ஜித்தா (06 பிப் 2023): சவுதி அரேபியாவில் ஜம்ஜம் தண்ணீர் ஆய்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஜம்ஜம் விநியோக மையங்களில் இருந்து தினமும் 150 மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்படும். மக்கா மதீனா மசூதிக்கு வரும் உம்ரா யாத்ரீகர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ள சூழலில் இந்த சோதனை அதிகரிக்கப்பட்டது.

இந்த ஆய்வு உம்ரா, ஹஜ் யாத்திரையின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாகும்.

மிக உயர்ந்த சர்வதேச தரத்திலான சிறப்பு ஆய்வகத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரப் பாதுகாப்பு பொதுத் துறையின் இயக்குநர் ஹசன் அல் சுவைஹ்ரி தெரிவித்தார்.

ஜம்ஜம் கிணறுகள் முதல் தொட்டிகள், கொள்கலன்கள் மற்றும் விநியோக மையங்கள் வரை அனைத்து இடங்களிலும் தினசரி ஆய்வுகளை மேற்கொள்ள 10 களக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு உம்ரா யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இரு பெரிய மசூதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிரது

நஸ்க் மற்றும் தவகல்னா ஆப்ஸ் மூலம் அனுமதி பெற்று, அட்டவணையைப் பின்பற்றிய பின்னரே உம்ராவைச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.அ


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *