தெஹ்ரான் (17 மார்ச் 2020): சீனா இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன.
அந்த வகையில் ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 11,178 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டுச் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதன் மூலம் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 16,169 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஈரானில் உள்ள சிறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், அரசியல் கைதிகள் உட்பட 85 ஆயிரம் கைதிகளை அந்நாட்டு அரசு தற்காலிக விடுதலை செய்துள்ளது. ஏற்கெனவே இதே காரணத்துக்காக மார்ச் மாத ஆரம்பத்தில் 70 ஆயிரம் கைதிகளை விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.