சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு!

Share this News:

ரியாத் (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் தொழுகை நடத்துவது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.

இதேபோன்று சவூதியிலும் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்காக சவூதி மத குருமார்கள் ஃபத்வா வழங்கியுள்ளனர். அதேவேளை தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) மட்டும் மசூதிகளில் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த வேளைகளில் வீடுகளில் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும் மக்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

ஆனால் இரு புனித நகரங்களான மக்கா, மதீனா ஆகிய பள்ளிகளில் தொழுகை வழக்கம் போல் நடைபெறும்.


Share this News:

Leave a Reply