மனிதம் வளர்ப்போம் – ஜித்தாவில் அணைத்து சமூகத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி!

Share this News:

கடந்த 18-4-22 அன்று ஜித்தா முத்தமிழ் சங்கம்( jems) சார்பாக நடை பெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வந்திருந்த சகோதரர் முஜிபுர் ரகுமான் அவர்கள் மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மௌலவிகள் என்றாலே மார்க்க விஷயங்களில் அதிலும் குறிப்பிட்ட வணக்க வழிபாடுகள் குறித்த விஷயங்களையே திரும்ப திரும்ப கேட்டு பழகி விட்ட நமக்கு மௌலவி முஜிபுர் ரகுமானின் பேச்சு நம்மை வியப்பில் ஆழ்த்தியது.

நிகழ்காலதிற்கு மிகவும் அவசியமான சிந்திக்க தக்க சிறந்த உரையை நிகழ்த்தினார்.

இதில் ஏராளமான மாற்று மத சகோதர சகோதரிகளுடன் இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர். அவரது உரையின் சுருக்கம்.

மனிதம் வளர்ப்போம் என்றால் எப்படி செடியை நட்டு, தண்ணீர் ஊற்றி உரம் போட்டா வளர்க்க முடியும்?

அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட அருகில் உட்காந்து ஸலாம் சொல்லி பேசுங்கள் , உங்கள் பெயர் என்ன? எந்த ஊர் என கேளுங்கள். இப்ப செடியை நட்டாசுங்க! மனிதம் தொடங்கிடிசு.

அடுத்து தண்ணீர் :
இஸ்லாமிய நண்பர் இன்னுறு இஸ்லாமிய நண்பர்டனோ அல்லது ஒரு யூதர் இன்னொரு யூதர் உடனோ கிரிஸ்துவர் கிரிஸ்துவர் உடனோ ஒரு இந்து இன்னொரு இந்து உடன் மட்டுமே தான் மனிதம் தொடங்கி வளர வேண்டுமா?

( நபி அவர்களுக்கு பாதி காப்பு தந்தவர் ஒரு யூதர், ஹிஜ்ரத் செய்ய அழைத்து சென்றவர் ஒரு யூதர்).
இல்லை மனிதர்கள் இடத்தில் . களிமண் கொண்டு படைக்கப் பட்ட ஆதம், ஹவ்வா முதல் கொண்டு அவர்களை கொண்டு உருவாக்கப் பட்ட அனைத்து நாட்டு மக்களும், மதம்,இனம் , நிறம், உயரம்
மொழி என வித்தியாசம் இன்றி அனைவரும் மனிதர்கள்.

அவர் அவர்கள் மதம் அவர் அவர்கள் நம்பிக்கை. நம் மதத்தை போய் மற்றவர்களிடம் திணிக்க இஸ்லாம் தடை செய்துள்ளது . நம்பிக்கை வேறு. மத திணிப்பு வேறு. இதை புரிந்து கொண்டாலே மனிதம் வளர தொடங்கி விடும். நம் மதத்திற்கு நம் நண்பர்கள் வர வேண்டும் என ஆசை படுங்கள். ரூம் போட்டு பிரியாணி சாப்பிட்டு, ஜூஸ் குடித்து விவாதம் செய்யுங்கள் அன்புடன். பிறகு அன்போடு கை கொடுத்து களைந்து செல்லுங்கள் ஆனால் உங்கள் மதத்தை திணிக்காதீர்கள்.

ரெண்டு விசயம் நம்மளை சொர்க்க வாதிகளாக ஆக்கும். 1. அடுத்தவன் இவ்வளவு செல்வம் வைத்திருக்கிறார் என பொறாமை படக் கூடாது. 2. அடுத்தவரை பற்றி கெட்ட எண்ணத்துடன் படுக்க செல்லாமல் அன்று மற்றவர்டன் நடந்த கசப்பான விசயமாக இருந்தாலும் மறந்து விட்டு படுக்கைக்கு செல்வது.

உரம்: நமக்கு பணம் சம்பாதிப்பது, நல்லது நடக்க வேண்டும் என்பது எல்லாம் சுய நலம். அதை தாண்டி நம்முடன் இருப்பவருக்கு நல்லது நடக்க வேண்டும் என எண்ணுவது அவருடைய கஷ்டத்தில் உதவுவது பொது நலம் இதை தான் சங்கம் இயக்கம் செய்ய வேண்டும் செய்கிறார்கள்.

ஒரு சில கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக மதம் மொழி இனம் நாடு என கோடு போட்டு மனிதர்களை பிரிக்கிறார்கள். அந்த கோட்டை நாம் அகற்றி விட்டால் மனிதம் வேகமாக வளர ஆரம்பிக்கும்.

நாம் வைக்கும் நோன்பு தொழுகை கடவுள் வணக்க வழிபாடுகளில் குறைகள் இருந்தால் அதை கடவுள் மன்னிக்க வாய்ப்பு இருக்கு. ஒரு சக மனிதனுக்கு எதிராக நாம் அவதூறு பரபினாலோ , அவருடைய சொத்தை அபகரிதாலோ, இல்லை அவரை அடிதாலோ பாதிக்கப் பட்டவர்கள் மண்ணிக்காத வரை கடவுள் அல்லது அல்லாஹ் மன்னிக்க வாய்ப்பே இல்லை. இது ஒரு கொக்கி போல் தொங்கும். எங்கே? (சொர்க்கத்திற்கு செல்லும் பொழுது நரகத்தை கடந்து ஒரு பாலம் வழியாக செல்லும் நிலையை நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்கள் அறிந்த விசயம்.) நீங்கள் நரகத்தில் வழியாக சொர்க்கத்தை நோக்கி ஒரு பாலம் வழியாக செல்லும் பொழுது அந்த பாலத்தில் பல கொக்கிகள் தொங்கும், அதில் ஒரு கொக்கி தான் இந்த கொக்கி உங்களை நரகத்தை நோக்கி இழுக்கும்.

அப்ப இந்த ஒரு சில அரசியல் ஆதாயம் தேடும் நபர்கள் போடும் கோட்டை கிழித்துக் கொண்டு சக மனிதனுக்கு தீங்கு மனதளவில் கூட எண்ணாமல் நல்லதையே எண்ணி சக மணிதனுக்கும் உதவினால் ஒழிய மனிதம் தழிர்க்காது வளராது. மனிதனை மனிதன் தான் அல்லாஹ்வின் உதவியை கொண்டு காப்பாற்ற முடியும். மனிதம் வளர்ப்போம் மதத்தை தாண்டி என நிறைவு செய்தார்.


Share this News:

Leave a Reply