குவைத் (07 ஜூலை 2021): வளைகுடா நாடுகளில் மிகக் குறைவான செலவு செய்யக்கூடிய நகரம் என்ற சிறப்பை குவைத் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நம்பியோ இன்டெக்ஸ் என்ற வலைத்தளம் இதுகுறித்த பட்டியல் ஒன்றை வெளியிடும். அது வெளியிட்டுள்ள பட்டியலில் வளைகுடாவில் அதிக வாழ்க்கைச் செலவு கொண்ட நகரங்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் தினசரி தேவைகள் மற்றும் உணவு, செலவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் குவைத் மிகக்குறைந்த செலவை உள்ளடக்கிய நகரம் என்றும், துபாய் அதிக செலவை உள்ளடக்கிய நகரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தர்,தோஹா மற்றும் அபுதாபி ஆகியவை வளைகுடாவின் இரண்டாவது அதிக செலவை உள்ளடக்கிய நகரங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தங்குமிடம், வாடகை பேன்றவை இதில் இடம்பெறவில்லை.