ரியாத் (17 நவ 2022): சவூதி அரேபியாவுக்கு புதிய வேலைவாய்ப்பு விசாக்களை முத்திரை குத்துவதற்கு டெல்லியில் உள்ள சவுதி தூதரகம் விதித்த போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் இனி அவசியமில்லை.
முந்தைய இந்த உத்தரவை இந்தியாவில் உள்ள சவூதி தூதரகம் திரும்பப் பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள சவுதி தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
மேலும் சவூதி அரேபியாவில் மகிழ்ச்சியுடன் வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்திய குடிமக்களின் பங்களிப்பை பாராட்டுவதாகவும் சவூதி தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இதுகுறித்து மும்பையில் உள்ள சவுதி தூதரகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.