கொல்கத்தா (17 நவ 2022): படுக்கையில் இருப்பதாக கூறி ஜாமீன் பெற்றவர் பின்னர் மகளுக்காக எப்படி பிரச்சாரம் செய்கிறார்? என்று மேற்கு வங்க எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கூறியதாவது: நரோத்யபாத்யா படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி உடல் நலம் கருதி ஜாமீன் பெற்ற குற்றவாளி, மனோஜ் குக்ரானி குஜராத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளார்.
“நரோடா பாட்யா படுகொலை வழக்கில் மனோஜ் குக்ரானி குற்றவாளி. 2016 செப்டம்பரில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். அவர் முழுக்க முழுக்க படுக்கையில் இருக்கிறார். இப்போது அவர் நரோடாவில் பாஜக வேட்பாளராக இருக்கும் தனது மகள் பயலுக்காக பிரச்சாரம் செய்கிறார். ஜாமீனை ரத்து செய்ய பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விரைவில் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்” – மஹுவா மொய்த்ராவின் ட்வீட்.
2002 குஜராத்தில் நடந்த கலவரத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நரோதாபத்யா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் மனோஜ் குக்ரானியும் ஒருவர். குற்றம் நிரூபிக்கப்பட்டு 2018 இல், குஜராத் உயர் நீதிமன்றம் மனோஜ் குக்ரானி மற்றும் 15 பேரின் தண்டனையை உறுதி செய்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குக்ரானிக்கு உடல் நலக் காரணங்களுக்காக ஜாமீன் கிடைத்தது.
இந்நிலையில் படுக்கையில் இருப்பதாக ஜாமீன் பெற்றவர் தனது மகளுக்காக தேர்தல் பிரச்சார்த்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர வேண்டும் என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.